சத்துணவு முட்டை சாப்பிட்ட பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்…!

பரமக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் சத்துணவு முட்டை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதையடுத்து எம்எல்ஏ முருகேசன் பள்ளியில் ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சிவானந்தபுரம் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 

இங்கு தமிழ், ஆங்கிலம் வழியில் 240 மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியராக வசந்தி உள்ளார். சமையலறராக முத்துகாமாட்சி என்பவர் பணியாற்றி வருகிறார். தினசரி 128 மாணவர்கள்  சத்துணவு சாப்பிடுவது வழக்கம். இன்று வழக்கம் போல் மதியம் சத்துணவு சாப்பிட்டதில் 8 மாணவர்கள், 4 மாணவிகள் என 12 பேருக்கு வயிறு வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனை அடுத்து உடனடியாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று சமைக்கப்பட்ட சத்துணவு முட்டை சரியாக வேகாமல் இருந்ததால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. 

பாதிக்கப்பட்ட மாணவ – மாணவிகளுக்கு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனையில் மாணவர்கள், ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரமக்குடி பரபரப்பு ஏற்ப்பட்டது. 

இதனையடுத்து பள்ளிக்கூடத்தில் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் ஆய்வு செய்தார். உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல் முட்டை, உணவு பொருட்கள் சமையலறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். ஆய்வின்போது பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேதுகருணாநிதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *