பாதுகாப்புக்குதான் பாஜக, அரசியலுக்கு தேவையில்லை… சீமான் புது கதை…!

கொள்கையை முன்வைத்து இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம் என ஈரோட்டு இடைத்தேர்தல் வேட்பாளர்  அறிவிப்பு  நிகழ்வில்  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்….

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பில் திருமதி.கண்மணி என்கிற மேனகா நவநீதனை ,  சீமான் தமது  வேட்பாளராக அறிமுகப்படுத்தினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, பிரதமர்  மோடியால் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை  நாம் சந்தித்து வருகிறோம். ஜி எஸ் என்ற வரி விதிப்போம் பண மதிப்பிழப்பும் இதற்கு மிகப்பெரிய காரணமாகும் ஆனால் அவர்கள் அதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் ஆவணப்படம் ஒன்றும் கற்பனை இல்லையே,  பிபிசி எடுத்த ஆவணப்படம் என்பது நடந்ததை தான் எடுத்துள்ளனர். இந்த ஆவணப்படத்தை பார்ப்பவர்களை கைது செய்வது தவறு. 

மோடி ஆட்சிக்கு வந்து பிறகு பொது நிறுவனமாக எதுவும் இல்லை,  அனைத்தும் தனியார் மையம் ஆகிவிட்டது. எதுவும் பொது நிறுவனமாக இல்லை,  அதானி என்ற ஒரு முதலாளியை சார்ந்தே பெரும் நிறுவனங்கள் உள்ளது.  இரண்டரை லட்சம் கோடி  கடனை வாங்கிக் கொண்டு,  உலக பணக்காரர் என்று கூறி வருகிறார்.  ஆனால் அவர் இந்தியாவுக்கு கடன்காரர். இதில் என்ன பெருமை இருக்கிறது. 

எனவே நாம் மாறுதலை உருவாக்க வேண்டிய சூழலில் உள்ளோம். அதை வாக்குகள் மூலம் மக்கள் நிரூபிக்க வேண்டும் என்றார். 

கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் 210 தொகுதிகளிலும் வாக்கு சேகரித்தேன், இங்கு ஒரு முறை தான் வந்தேன் , அதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் 11 ஆயிரம் வாக்குகள் மேல் பெற்றேன்,  ஆனால் இந்த இடைத் தேர்தலில் 12 நாட்களுக்கு மேல் இங்கு இருந்து பிரச்சாரத்தை மேற்கொள்வேன் என்றார். 

வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்திற்கு  வருவதை இவர்களால் தடுக்க முடியாது.

குடிப்பழக்கம் மற்றும் இலவசத்தால் மக்கள் உழைக்கும் எண்ணத்தை மறந்து விட்டனர். நம் மக்கள் எந்த வேலைக்கும் வரவில்லை , எனவே தான் வடநாட்டு மக்கள் வருகிறார்கள்.  அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றால் ,  நாம் உழைக்க வேண்டும் என்றார். இல்லையால் நாம் நிலமற்ற மனிதர்களாகி ,  நாம்  அடிமைகளாகி , நாட்டை விட்டு  நாம் விரட்டப்படக்கூடிய சூழல் ஏற்படும் என்றார். 

பெருந்துறை சந்தையில் பெரும்பாலும் வடநாட்டுக்காரனாகத் தான் இருக்கிறான். வருங்காலத்தில் வடநாட்டுக்காரன் தான்  அரசியலையும்,  அதிகாரத்தையும்  அவன் தான் தீர்மானிப்பான்,  அது முழுக்க பாஜக வாக்குகள் தான்.  இது பேராபத்து என்பதை உணர்ந்து ,  இந்தி திணிப்பை எதிர்ப்பது போல ,  இதனையும் எதிர்க்க வேண்டும் என்றார். 

பான் மசாலா,  குட்கா விஷயத்தில் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பது என்பது    நீதிமன்றம் நீதி கிடைக்கும் இடமாக இல்லை என்று  அது தீர்ப்பு மன்றமாகத் தான் இருக்கிறது. நீதிமன்றத்தில் மதுக்கடையை மூட வேண்டும் என்றால்,  அதை  அரசின் கொள்கை முடிவு என்கிறது நீதிமன்றம், அதே நீதிமன்றத்தில் அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்து நீட் லிருந்து விலக்கு அளிக்க  வேண்டுமென்று ஒரு கொள்கை முடிவு எடுத்து சென்றால் , அதில் தலையிட்டு நீட் தேர்வை எழுத வேண்டும் என்கிறது.  

இது என்ன நீதிமன்றம், மக்களை குடிக்க வைப்பதில் தலையிடும் நீதிமன்றம் குழந்தைகள் படிக்க வைப்பதில்  தலையிடுவது என் நியாயம் என்றார். ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் ஆளுநர் கையெழுத்து போடாதது என்பது,  நடத்துவதே அவர்கள் சார்ந்த முதலாளிகள் தான் என்பதால் தான். இது மிகக் கொடுமையாகும். 

இடைத்தேர்தலில் நாங்கள் வந்தால் ஒரு மாற்றம் ஒரு மாற்றத்திற்கான ஒரு விதை ஊன்றப்படும் என்றார். 

அதிமுகவைப் பொறுத்தவரை பணத்தை பாதுகாக்க பாஜக  தேவைப்படுகிறார்கள் ,  ஆனால் அரசியலுக்கு அவர்கள் தேவைப்படவில்லை என்ற நிலையில் தான் இருக்கிறார்கள் என்றார். இதனைத் தொடர்ந்து தங்களது கட்சி வேட்பாளராக கண்மணி என்கிற மேனகா நவநீதனை சீமான் அறிமுகப்படுத்தி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *