இந்த பொங்கல் கரும்பு பொங்கல் இல்லை கருமாதி பொங்கல்தான்.! வேதனையில் விவசாயிகள்

வழக்கம்போல் விவசாயிகள் விளைய வைத்த கரும்பை தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால் இந்த பொங்கல் கருப்பு பொங்கலாகவோ இல்லை கருமாதி பொங்கலாகவோ தான் அமையும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வேதனை தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது.இதில் பொங்கல் தொகுப்பின் முக்கியமான ஒன்றான கரும்பு இடம்பெறாததை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தின் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி தமிழக அரசு பொங்கல் கரும்பை கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கொள்முதல் செய்து பொங்கல் பரிசுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கிட வேண்டும்.கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் பரிசுத்தொகுப்பில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பை கொள்முதல் செய்து கொடுத்து வந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இல்லை என அறிவிக்கப்பட்டது.

இதனால் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கடும் பாதிப்பு ஆகி இருக்கின்றனர்.தமிழ்நாட்டில்  பல்வேறு மாவட்டங்களில் கரும்பு சாகுபடிகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் கடனை வாங்கி கரும்பை விவசாயம் செய்திருக்கிறோம் ஆனால் தற்பொழுது தமிழக அரசு கரும்பை கொள்முதல் செய்யாமல் இருப்பதால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் அதற்கு பதில் எங்களுக்கு தமிழக அரசே விஷத்தை வாங்கி கொடுத்து கொன்றுவிடலாம் என வேதனை தெரிவித்தனர்.

ஆக தமிழக அரசு கரும்பை கொள்முதல் செய்தால் தான் மீதமுள்ளதை வியாபாரிகள் கொள்முதல் செய்வார்கள் அப்போதுதான் எங்களுக்கு பயிரிடப்பட்டதற்கான விலை கிடைக்கும். இதனால் தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுத்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்க வேண்டும். எங்களிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் இல்லை என்றால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கருப்பு பொங்கலாகவும் கருமாதி பொங்கலாகவும் தான் அமையும் என வேதனையுடன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *