விரைவில் ஆதார் எண் போல தமிழக அரசின் ‘மக்கள் ஐடி’ 

மாநில அரசின் மூலம் அறிவிக்கப்படும் பல்வேறு திட்டங்களை இந்த ஐடி எண் மூலம் ஒருங்கிணைக்கவும் செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு ஆதார் எண் வழங்கியுள்ளது அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றும் ஆதார் எண்ணை மையமாக வைத்த செயல்படுத்தப்படுகிறது

இதேபோல மாநில அரசு தமிழக மக்களுக்கு என தனியாக மக்கள் ஐடி என்ற 10 முதல் 12 இலக்க எண்களை அறிவிக்க உள்ளது

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையை கணக்கெடுத்து மாநில குடும்ப தரவு தளம் உருவாக்கப்பட உள்ளது

தமிழகத்தில் வசிக்கும் மக்களை வயது பாலினம் சமூக அடிப்படையில் கணக்கிட்டு பத்து முதல் 12 இலக்க ஐடி எண்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது இது மக்கள் ஐடி என அழைக்கப்பட உள்ளது

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இதற்கான பணியை உன்னிடத்தில் உள்ளது

தரவுகளை சேகரித்து இதற்கான தளத்தை நிர்வகிக்க திறமையும் அனுபவம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது

மக்கள் ஐடி மூலம் தமிழ்நாட்டில் மக்கள் தொகையை துல்லியமாக கணக்கிடவும் அரசின் திட்டங்களை இந்த ஐ டி எண் இப்படியாக வைத்து செயல்படுத்தவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *