அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் பெலாரஸ் நாட்டின் அலஸ் பியாலியாட்ஸ்கி

உலகின் மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு, இயற்பியல், வேதியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அக்டோபர் 3-ம் முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அக்டோபர் 3ம் தேதி,  2022-ஆம் ஆண்டிற்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மரபியல் நிபுணரான ஸ்வாண்டே பாபோவுக்கு வழங்கப்பட்டது. அவரை தொடர்ந்து  இயற்பியலுக்கான நோபல் பரிசை பிரான்ஸ் நாட்டின் அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜூன் எப் கினாசர் மற்றும் ஆஸ்திரியாவின் அண்டன் ஸிலிங்கர் ஆகிய மூன்று பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

வேதியியலுக்கான நோபல் பரிசை அமெரிக்காவின் பேரி ஷார்ப்லஸ், கேரோலின் பெர்டோசி, டென்மார்க்கின் மார்டென் மெல்டால் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோ ஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரி ஆகியவற்றின் வளர்ச்சிக்காகப் பணியாற்றியதற்காக இந்தப் பரிசை வென்றுள்ளனர். இலக்கியத்திற்கான நோபல் பரிசை  பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. L Occupation என்ற நூலை எழுதியதற்காக ஆனி எர்னாக்ஸூக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை பெலாரஸ் நாட்டின் மனித உரிமை ஆர்வலர் அலஸ் பியாலியாட்ஸ்கி -க்கும், ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பான Memorial மற்றும் உக்ரேன் மனித உரிமைகள் அமைப்பிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *