ரஷ்யா போரை உடனடியாக நிறுத்த வேண்டும் – ஜெய்சங்கர்

கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வரும் உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில் வருங்காலத்தில் இது இன்னும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  அதிலும் அணு ஆயுத தாக்குதல் அச்சம் அதிகரித்துள்ளது. ஆகையால் உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை தான் ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி இது போருக்கான நேரம் அல்ல என்று கூறியுள்ளார். இந்த போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளையும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட அண்டை நாடுகளுக்கு பொருளாதார உதவிகளையும் இந்தியா செய்து வருகிறது. 

US Urges World to Tell Russia to Stop Its Nuclear Threats

உக்ரைன் ரஷ்யா போர் நிற்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று ஐ நா தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார். இதுகுறித்து பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அவர் கூறியதாவது, கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வரும் போர் உக்ரைனில் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அச்சத்தையும் ரத்த கலரியையும் நிறுத்திவிட்டு அமைதியை நிலை நாட்டுவதற்கு அந்த நாடுகள் முற்படுவதில்லை. அணு ஆயுத தாக்குதல் பற்றி பேசுவதற்கே அச்சப்பட்ட நிலை மாறி தற்போது பேசும் பொருளாகிவிட்டது. அனைத்து நாடுகளும் அணு ஆயுதங்களை அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *