ஃப்ரண்ட் அமைப்பு முழு அடைப்பு போராட்டம்..!! கேரளாவில் வெடித்த வன்முறை..!!

ஆந்திரா, கர்நாடகா, கேரளா தமிழ்நாடு ஆகிய 11 மாநிலங்களில் நடைபெற்ற சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக கேரளாவைச் சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு சேர்ந்த முன்னணி தலைவர்களான தேசிய தலைவர் ஓ.எம்.ஏ.சலாம், தேசிய செயலாளர் நஸ்ருதீன், மாநிலத் தலைவர் சி.பி.முஹம்மது பஷீர், தேசிய அவை உறுப்பினர் பி.கோயா உள்ளிட்டோர் கைதாகியுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக கேரளாவில் மாநிலம் தழுவிய பந்த்-க்கு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது.

Kerala-born PFI blamed for communal violence in other states | Latest News  India - Hindustan Times

இந்த போராட்டத்தில் பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறி பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.  கேரளா மாநில போக்குவரத்து சொந்தமான பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்துள்ளன. கல்வீச்சு சம்பவத்தில் இருந்து தப்பிக்க பேருந்து ஓட்டுநர்கள் சிலர் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேருந்துகளை இயக்குகின்றனர்.

கல்வீச்சு காரணமாக கோழிக்கோடு பகுதியில் 15 வயது சிறுமியும், கன்னூரில் ஆட்டோ டிரைவர் ஒருவர் காயமடைந்துள்ளார். பதற்றமான சூழல் நிலவி வருவதால் மாநிலம் முழுவதும் காவல்துறை உஷார் நிலையில் இருந்து பாதுகாப்பை பலப்படுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி அனில் காந்த் உத்தரவிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *