இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற விரும்புகிறேன் – பிரதமர் மோடி

உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட்டில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

இந்த அமைப்பில் சீனா, இந்தியா, உஸ்பெகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன. இதில் பார்வையாளராக ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ் மற்றும் மங்கோலியா போன்ற நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் 22வது உச்சி மாநாடு தற்போது உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.

இதில் பேசிய அவர் பிரதமர் மோடி இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற விரும்புவதாக கூறியுள்ளார். உலகம் கொரோனா தொற்றை முறியடித்து வருகிறது. கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்தியாவை நாங்கள் உற்பத்தி மையமாக மாற்ற விரும்புகிறேன் என்று கூறினார்.

மேலும் இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 7.5% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த ஏப்ரல் மாதம் குஜராத்தில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாரம்பரிய மருத்துவத்திற்காக சர்வதேச மையம் உலக சுகாதார அமைப்பால் அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். எனவே பாரம்பரிய மருந்துகளுக்காக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுடன் சேர்ந்து பணியாற்ற முயற்சிகளை இந்தியா எடுக்கும் என்றும் கூறியுள்ளார். எட்டு நாடுகளும் சந்தித்து பேசும் முக்கிய நிகழ்வாக இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *