காவலரை கொடூரமாக தாக்கும் பாஜகவினர்.. பதை பதைக்க வைக்கும் வீடியோ!

Police

கொல்கத்தாவில் காவலரை ஒருவரை பாஜகவினர் சூழ்ந்து கொண்டு கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேற்குவங்க மாநிலத்தை ஆட்சி செய்து வரும் மம்தா பானர்ஜி அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை கண்டித்து பாஜகவினர் நேற்று கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

கொல்கத்தா முழுவம் பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜகவினர் தலைமையில் போராட்டக்காரர்கள் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி சென்றனர். இதில் அனுமதியை மீறி பேரணியை நடத்தியதாக கொல்கத்தா பாஜக மாநில தலைவர் மஜூம்தார், ஹூக்ளி தொகுதி பாஜக எம்.பி. லாக்கெட் சட்டார்ஜி, பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனால் கொல்கத்தாவில் ஹெளரா, லால் பஜார், எம்.ஜி.சாலை உள்ளிட்ட பகுதிகளில் காவலர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரை பாஜகவினர் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாஜகவினரின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களை குவித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *