அனல் நிலையம் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல்..!!  ஜெலன்ஸ்கி கடும் கண்டனம்..!!

உக்ரைன் நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்கள் மீது ரஷ்ய ராணுவ படைகள் தாக்குதல் நடத்திய உள்ளது. இது 6 மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் போரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

போரில் உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்ய படைகளின் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து, ரஷ்யா ராணுவ படைகள் கிழக்கு உக்ரைன் மீது பார்வையைத் திருப்பியது. 

ஏற்கனவே கிழக்கு உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், உக்ரைன் வசம் இருந்த பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது. இந்நிலையில் ரஷ்ய ராணுவ படைகள் பின்வாங்கின விவகாரத்தில் உக்ரைனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. 

அனல் மின் நிலையம் மீது தாக்குதல்; இருளில் மூழ்கிய கிழக்கு உக்ரைன்:  ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம் | Cynical Revenge: Ukraine Says Russia  Targeted Power Grid After Setback ...

குறிப்பாக அந்த பிராந்தியத்தில் உள்ள அனல் மின் நிலையங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவ படைகள் தாக்குதல் நடத்தின. இதன் காரணமாக உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் உட்பட பல நகரங்கள் முற்றிலும் இருளில் மூழ்கின. 

இதனால் அங்குள்ள மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். இது திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை என ரஷ்யாவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *