பிரிட்டன் மன்னர் சார்லஸ்க்கு எதிராக போராடும் மக்கள்..! காரணம் என்ன..?

பிரிட்டன் மன்னர் சார்லஸ் முடிசூட்டப்பட்டதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.  

இரண்டாம் எலிசபெத், கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் ராணியின் உடலுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து புதிய மன்னராக 73 வயது நிரம்பிய சார்லஸ் பொறுப்பேற்றார். 

இன்று முதல் இரண்டு பிறந்தநாட்கள் கொண்டாடும் அரசர் சார்லஸ்!!!

இந்நிலையில் பிரிட்டனின் மன்னராக சார்லஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு  எதிர்ப்பு தெரிவித்து பலர்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக நான்கு பேரை பிரிட்டன் போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் மூவர் எடின்பர்க் சேர்ந்தவர்கள். 

கைது நடவடிக்கை குறித்து தொழிலாளர் கட்சியின் எம்.பி சாரா கூறும்போது இந்த கைதிகள் அதிர்ச்சி அளிக்கின்றன. தங்களது கருத்தை கூறுவதற்கு எந்த நபரும் கைது செய்யப்படக் கூடாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *