கோவிட் தொற்றின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்களை கணக்கிட வேண்டும்

கோவிட்-19 தொற்றின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்த மரணங்கள் மாநில அரசுகளுடன் இணைந்து கணக்கிட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடாளுமன்ற நிலைக் குழு சுகாதாரம் குறித்த தனது 137-வது அறிக்கையை மாநிலங்களவையில் திங்கட்கிழமை சமர்ப்பித்தது.  அந்த அறிக்கையில் கோவிட் தொற்று பாதிப்பு அதிகரிப்பு சுகாதார கட்டமைப்பின் மீது அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. 

பல கோவிட் நோயாளிகளின் குடும்பத்தினர் ஆக்ஸிஜன் சிலிண்டருக்காக வரிசையில் காத்திருந்தது, சிலிண்டர் வேண்டி கொஞ்சியது, மருத்துவமனைகளில் குறைவான நேரத்திற்கே ஆக்ஸிஜன் சப்ளை கையிருப்பு இருந்தது போன்ற பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.

Explainer : கொரோனா தடுப்பூசி பற்றிய சந்தேகங்களும்..முழுமையான விளக்கங்களும்  | know everything about corona vaccination doubts and explanations – News18  Tamil

மாநிலங்களுக்கிடையே ஆக்ஸிஜன் வழங்கலை நிர்வகிப்பதில் அரசு தோற்றுவிட்ட அதேவேளையில், வானளாவிய ஆக்ஸிஜன் தேவை இந்த போது, அதன் விநியோகத்தை சீர்படுத்தாதது எதிர்பாராத மருத்துவச் சிக்கலுக்கு வழிவகுத்தது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கோவிட் மரணங்கள் நிகழவில்லை என்று கூறியிருப்பது நிலைக்குழு கலக்கமடைய செய்துள்ளது. மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளன என ஊடகங்களில் வெளியான செய்திகள் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். அரசாங்கம் உண்மையை அலட்சியம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதாரத்துறை அமைச்சகம், மாநில அரசுகளுடன் இணைந்து ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து கணக்கிட வேண்டும் என்றும், கோவிட் மரணங்கள் குறித்த ஆவணங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *