காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்  2 நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்றுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். 

குஜராத்தில் 24 ஆண்டுகளாக அங்கு ஆட்சியில் இருக்கும் பாஜக இந்த முறையும் ஆட்சியை தக்க வைத்து விடுவதில் விடாப்பிடியாக உள்ளது.

In Ahmedabad, Kejriwal tells BJP: We will give free ki revdi. Do whatever  you want | Cities News,The Indian Express

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வெற்றி சூடியுள்ளது தனது அடுத்த குறி வைத்துள்ளது. இதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி குஜராத் பயணம் மேற்கொண்டு வருகிறார்.தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவது, பிரசாரத்தில் ஈடுபடுவது என இப்போதே தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார். 

இந்த நிலையில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் சென்றுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்று அகமதாபாத் நகரில் தூய்மை பணியாளர்களை சந்தித்து அவர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துரையாடினார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு கெஜ்ரிவால் பதிலளித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *