இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே..!! தரைமட்டமானது நொய்டா இரட்டை கோபுரம்..!!

நொய்டாவில் உள்ள 30 மற்றும் 32 மாடிகளை கொண்ட இரட்டைக் கோபுர கட்டடம் தகர்க்கப்பட்டது. இந்த கட்டடமானது விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது தெரியவந்தது  தொடர்ந்து உச்சநீதிமன்றம் அதை இடிக்க உத்தரவிட்டது. 

அதன்படி இன்று இந்த இரட்டைக் கோபுரங்கள் இடிக்கப்பட்டது.  இந்த இரட்டை கோபுரங்கள் தான் நாட்டில் தகர்க்கப்பட்ட மிகப்பெரிய கட்டடங்களாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதிக மக்கள் தொகையைக் கொண்ட நொய்டா நகரத்தில் 320 அடிக்கு உயர்ந்து நிற்கும் இந்தக் கட்டடங்களில் 30 மாடிகள் உள்ளன. ‘

ஏறக்குறைய 3,700 கிலோ வெடிமருந்துகள் கொண்டு இந்தக் கட்டடங்கள் தகர்க்கப்பட்டது.  இதற்காக மூன்று நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள் இதில் ஈடுபட்டனர். இந்தக் கட்டடங்களை சுற்றி உள்ள அனைவரும் இன்று அதிகாலையில் அங்கிருந்து வெளியேற பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

தெருக்களில் சுற்றித் திரியும் உயிரினங்கள் அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் சேர்க்கப்படும். மேலும் அப்பகுதியில் அருகே உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.  

இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்படும்போது, 984 அடி உயரம் வரையில் தூசு பரவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, விமான நிலையங்களில் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *