உலகின் முக்கிய தலைவர்களில் முதல் இடம் பிடித்த பிரதமர் மோடி..!!

உலக தலைவர்கள் தரவரிசை பட்டியல் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. 

மார்னிங் கன்சல்ட் சர்வே என்ற அமைப்பு மிகவும் பிரபலமான உலக தலைவர்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 75 % ஓட்டுகள் பெற்று  பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தில் உள்ளார்.

மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஆப்ரடர் 63 % ஓட்டுக்களுடன் 2-ம் இடத்திலும், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி 54 % ஓட்டுக்களுடன் 3-ம் இடத்திலும் உள்ளனர்.  உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் கணக்கெடுப்பில் உலகத் தலைவர்கள் 22 பேர் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளனர். 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 41 % ஓட்டுக்களுடன் 5-வது இடம் பிடித்துள்ளார். கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ 39 சதவீத ஓட்டுக்களையும், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா 38 % ஓட்டுக்களையும் பெற்றுள்ளார். கடந்த ஜனவரி மற்றும் கடந்த 2021-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், பிரதமர் மோடி பிரபல உலகத் தலைவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *