நொய்டா இரட்டை கோபுரக் கட்டிடம் இடிப்பு: விதிமுறைகளை மீறியதால் ஏற்பட்ட விளைவு..!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ள 40 மாடிகளை கொண்ட இரட்டை கோபுர குடியிருப்பு கட்டிடம் நாளை மறுநாள் வெடி வைத்து தகர்க்க பட உள்ளது. 

நொய்டாவில் தனியார் நிறுவனத்தின் 40 மாடிகளை கொண்ட இரட்டை கோபுரக் கட்டடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது தெரியவந்ததை அடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி நாளை மறுநாள் சுமார் 3700 கிலோ வெடி மருந்துகளை பயன்படுத்தி தகர்க்கப்பட உள்ளது.

ஏபெக்ஸ் மற்றும் சியான் என்றழைக்கப்படும் இரட்டை கோபுரங்கள் சூப்பர் டெக் எனப்படும் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் கட்டப்பட்டன. பிறகு அவை கட்டிட விதிமுறைகள் மீறியுள்ளதாக கண்டறியப்பட்டது.

நொய்டாவில் 9 விநாடிகளில் இடிக்கப்படும் இரட்டை கோபுர கட்டடம் - பின்னணி என்ன?  | Noida That s all it will take to demolish two 100 metre tall buildings in  9 seconds | Puthiyathalaimurai - Tamil

இதனால் கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் ட்ரோன்கள் உள்ளிட்டவை பறக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். அதேபோல் கட்டிடத் தகர்ப்பை ட்ரோன்களை பயன்படுத்த படம் பிடிக்க நினைப்பவர்கள் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதை மீறி செயல்பட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தகர்ப்பு நடைபெற உள்ள கட்டிடத்தின் நுழைவாயிலில் இருந்து 450 மீட்டர் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் 250 மீட்டர் வரை நபர்கள் நுழைவதற்கு தடை பிடித்திருப்பதாகவும் அதற்கு ஏற்றார் போல போக்குவரத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நொய்டா இரட்டை கோபுர கட்டடத்தை இடிக்க ஏற்பாடு | Dinamalar Tamil News

இரட்டை கோபுர குடியிருப்பு கட்டிடம் அமைந்திருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் காலை 7 மணிக்கு முன்பாக அங்கிருந்து வெளியேறியிருக்கவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *