பயனர்களின் தரவுகளை தனியாரிடம் விற்கும் ஐ.ஆர்.சி.டி.சி

இந்தியன் ரயில்வே துறைக்குச் சொந்தமான ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் பதிவேற்றப்படும் பயணிகளின் விவரங்களைத் தனியாருடன் பகிர்ந்து கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயனாளர்களுக்கு கேட்டரிங் மற்றும் சுற்றுலா சேவைகளை அளித்து வருகிறது. ஐ.ஆர்.சி.டி.சி தளத்திலிருந்து ஒரு ஆண்டுக்கு சுமார் 4, 00, 000 லட்சம் டிக்கெட்டுகள் புக் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பயனர்களின் டிஜிட்டல் தரவுகளை விற்பனை செய்வதற்கான டெண்டரை ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்டிருந்தது. அதாவது ரூ.1000 கோடிக்கு பயனர்களின் தரவுகள் கிடைக்கும். அதன்படி பயனர்கள் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் பதிவு செய்யும் பெயர், வயது, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி , பயண வகுப்பு, கட்டணம் செலுத்தும் முறை ஆகிய தரவுகள் தனியாருக்கு விற்கப்படும்.இந்த விற்பனை முயற்சிக்கு மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Image

இந்த தரவுகளை தனியாருக்கு விற்பதன் மூலம் ஹோட்டல்களுக்கும்,சுற்றுலா நிறுவனங்களுக்கும் பெருத்த லாபம் உண்டாகும். எடுத்துக்காட்டாக விமான தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, சீசன் எவ்வளவு பிஸியாக இருக்கும் என்பதை முன்பே அளவிட்டு கொள்ள முடியும். அதன்படி ஏராளமான மக்கள் தங்கள் நகரத்திற்குள் வரும் போது அங்கேயே தயாரித்து விற்கப்படும் பொருட்களின் விலைகளை கடுமையாக உயர்த்தப்படலாம் அல்லது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையும் போது பொருட்களின் விலைகளைக் குறைக்கப்படலாம். அதாவது பொருளுக்கான நிலையான விலை இல்லாமல் போக வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *