மசூதியில் குண்டுவெடிப்பு : 21 பேர் பலி

காபூல்:  ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி பொறுப்பு ஏற்று கொண்டு ஒரு வருடமாகிறது. இந்த ஒரு வருடத்தில் மசூதிகளில் குண்டு வெடிப்ப்பு, அப்பாவி மக்களை கொல்லுதல் போன்ற செயல்கள் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் காபூல் மாகாணத்தின் மசூதி ஒன்றில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. மசூதிக்குள் குண்டு வெடித்ததால் 60 பேர்  சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இதில் பலத்த காயமடைந்த 12 பேரை அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

தாலிபான்களின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாதிகளும்,   ஐஸ் தீவிரவாதிகளும் இது போன்ற குண்டுவெடிப்பு நடத்தி வருகின்றனர். அவர்களின் கொட்டத்தை அடக்க தாலிபான்கள் இந்த தாக்குதலை நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில்  ஆட்சி பொறுப்பய் ஏற்று கொண்டு இந்த மாதத்துடன் ஒரு வருடம் ஆகிறது.இந்த நிலையில் மசூதியில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

Afghanistan: Dozens killed as blast rocks Kabul mosque

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி வந்தது முதல் கடுமையான கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களை முடக்கும் நடவடிக்கையில் தலிபான் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வரும்போது, உடலை முழுவதும் மூடக்கூடிய நீலநிற புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தலிபான்கள் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் ஆப்கனில் தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *