பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்

பிரபல தொழிலதிபரும், பங்குச் சந்தை முதலீட்டாளருமான
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இன்று காலை மும்பை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 42.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவிற்க்கு இன்று காலை 6.45 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து ப்ரீச் கேண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிக் புல் ஆஃப் தலால் ஸ்ட்ரீட் என்றும் அழைக்கப்படும் இவர் சுமார் $5.5 பில்லியன் சொத்து மதிப்பைக் கொண்டிருந்தார் என்று போர்ப்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இவர் ”ஆகாசா ஏர்லைன்” என்ற பெயரில் புதிய விமான நிறுவனத்தை தொடங்கினார்.

அவருக்கு இருந்த பல உடல்நலப் பிரச்சினைகளால் ஆகாசா ஏர்லைன்” தொடங்கும் நிகழ்ச்சியில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு தான் காணப்பட்டார். “இந்தியாவின் வாரன் பஃபெட்” என்று அழைக்கப்பட்ட இவர் நம் நாட்டின் பங்குச் சந்தையையில் பெரும் புள்ளியாக திகழ்ந்தார்.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். மேலும் ”நிதி உலகில் அழியாத பங்களிப்பை விட்டுச் சென்றுள்ளார்” என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *