ஜனநாயகத்தின் மரணத்தை நாம் விரைவில் பார்க்கப்போகிறோம் – ராகுல் காந்தி

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து அமளியை சந்தித்து வருகிறது. மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்த நாள் தொடங்கி பணவீக்கம்,  விலைவாசி உயர்வு, போன்றவற்றை கண்டித்து எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்து போராட்டம் நடத்தி வருகிறது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி இது குறித்து பேசுகையில் மக்களின் பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சமூகத்தில் வன்முறை போன்றவை குறித்து மோடி எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. 

4-5 பேரின் நலனைக் காக்க அரசு மற்றும் அரசாங்கத்தின் ஒரே செயல்திட்டம்  இருக்கிறது.  இந்த சர்வாதிகாரம் 2-3 பெரும் பணக்காரர்களின் நலனுக்காக நடத்தப்படுகிறது என குற்றம் சாட்டினார். 

நாம் ஜனநாயகத்தின் மரணத்தை விரைவில் பார்க்கப்போகிறோம்.  ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கி, செங்கற்களால் கட்டப்பட்ட இந்தியா நம் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கிறது. 

இந்த சர்வாதிகார யோசனைக்கு எதிராக நிற்கும் பலரை கொடூரமான முறையில் தாக்கப்படுவதுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என கண்டனம் தெரிவித்துள்ளார்.  

இந்த ஹிட்லரும் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார் அவர் அதை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை கவனித்து பாருங்கள் ?  ஜெர்மனியின் அனைத்து நிறுவனங்களையும் அவர் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தீவிரம் காட்டினார். அதே போல  முழு அமைப்பையும் என்னிடம் கொடுங்கள், தேர்தல்கள் எப்படி வெற்றி பெறுகின்றன என்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன் என பேசியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *