இந்திய பெருங்கடல் பகுதியில் தீவிரவாதம் பெரும் சவாலாக உள்ளது – பிரதமர் மோடி

மாலத்தீவுக்கு இந்தியா ரூ. 790 கோடி கடன் உதவி அளிக்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது சோலி 4 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று டெல்லி வந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

இப்ராஹிம் முகம்மது சோலி தலைமையில் இரு நாடுகளின் பிரதிநிதிகள் இடையே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் நிதி உதவியின் கீழ் மாலத்தீவு தலைநகர் மாலியில் கட்டப்பட்டு வரும் 4 ஆயிரம் குடியிருப்புகளுக்கான பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறினார்.

நியூ டயமன்ட் கப்பலில் மீண்டும் தீ – விரைந்தது விசேட குழு – Lankaone

கூடுதலாக 2 ஆயிரம் குடியிருப்புகள் கட்டுவதற்கு நிதி உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அதோடு, மாலத்தீவுக்கு கடனாக சுமார் ரூ. 790 கோடி வழங்க ஒப்புக் கொள்ளப்பட்ட உள்ளதாகத் தெரிவித்தார்.  இதன் மூலம் நிலுவையில் உள்ள பல திட்டங்கள் நிறைவேறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா – மாலத்தீவு இடையேயான உறவு தூதரக ரீதியிலான மட்டுமல்ல என்றும் அதற்கு அப்பாற்பட்டது என்று தெரிவித்த மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது சோலி இந்த சந்திப்பு இதை உறுதிப்படுத்துகிறது என்றார். 

Leave a Reply

Your email address will not be published.