ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் மகள் உமா மகேஸ்வரி தற்கொலை..!!

ஆந்திர மாநில முன்னாள்  முதலமைச்சர் என்.டி.ராமராவ் மகள் உமா மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) நிறுவனரின் இளைய மகள் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிஆர்பிசி பிரிவு 174 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான டக்குபதி புரந்தேஸ்வரி ஆகியோரின் சகோதரி உமா.

என்டிஆருக்கு எட்டு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர். நான்கு மகள்களில் மகேஸ்வரி இளைய மகள் ஆகும்.  என்டிஆர் மூன்று மகன்களும் ஏற்கனவே இறந்துவிட்டனர். என்.டி.ராமராவ் என்.டி.ஆர் என்று அழைக்கப்பட்டார்.

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அவர் 1982 இல் தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கி, அப்போது பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தில் ஒன்பது மாதங்களுக்குள் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தார். என்.டி.ராமராவ்  1996-ல் தனது 72-வது வயதில் மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published.