பஞ்சாபில் பரபரப்பு..!!   வேளாண் சட்டங்கள் குறித்து ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்..!

கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில்  தொடர் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசு, விவசாய சங்கங்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பரில் 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டன.

இந்த சூழலில் மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி பஞ்சாபில் விவசாயிகள் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். 

இதுகுறித்து சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் மூத்த தலைவர் ஹரிந்தர் சிங் பேசும்போது மத்திய அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது உள்ளது. 

அவற்றை நிறைவேற்றக் கோரி 4 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தை நடத்தியுள்ளோம். குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என் தெரிவித்தார். 

மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டு வருவது  தற்போது மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…