கேரளாவில் குரங்கு அம்மை பாதித்த நபர் பலி..!! தீவிர விசாரணையில் சுகாதாரத்துறை குழு..!!

உலகம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குரங்கு அம்மை நோய்க்கு இதுவரை கேரளாவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் குரங்கு அம்மை காரணமாக ஒருவர் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரணை நடத்த போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று உயிரிழந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த இந்த நபர் குரங்கு அம்மை அறிகுறி  காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கேரள அரசு தெரிவித்தது. 

இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர் சோர்வு மற்றும் மூளை அழற்சி காரணமாக அவர் திருச்சூரில் சிகிச்சை பெற்று இருக்கிறார். சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதா என்று விசாரணை  நடந்து வருகிறது.

உயிரிழந்த இளைஞருக்கு தொடர்புடையவர்கள் விவரம், அவர் பயணித்த இடங்களில் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள் என கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *