போராட்டங்கள் நடத்துவது எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை – ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் உள்ள கண்டி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரணில் விக்ரமசிங்கே, அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டது வேதனை  அளிப்பதாக உள்ளது.

மேலும் அவர் பேசுகையில் இலங்கையில் நடைபெறும் போராட்டங்களால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதாக குறிப்பிட்டார்  சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகாத வரை பிற நாடுகள் இலங்கைக்கு நிதி உதவி அளிக்க முன்வராது என்றார்.

சர்வதேச நாணய நிதியம் நிதியுதவி அளிக்காத நிலையில், நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பிரச்னைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை குற்றம் சாட்டுதல் பயனில்லை என தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க அனைவரும் ஒன்றிணைய வேண்டியது  அவசியம் என்றார்.

No home to go', says Sri Lankan President Wickremesinghe amid threats from  protestors | World News – India TV

போராட்டங்கள் நடத்துவதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே, போராட்டக்காரர்கள் தன்னை வீட்டுக்குப் போகச் சொல்வதை சுட்டிக்காட்டி, வீடு இல்லாத நிலையில் தான் எவ்வாறு வீட்டுக்குப் போக முடியும் என கேள்வி எழுப்பினார்.

தனது சொந்த வீட்டை போராட்டக்காரர்கள் எரித்துவிட்டதை சுட்டிக் காட்டியவர் தான் வீட்டுக்குப் போக வேண்டுமானால் முதலில் போராட்டக்காரர்கள் தனது வீட்டை சீர் செய்து தர வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.