மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!!  இதுவரை 10 பேர் உயிரிழப்பு..!!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ  விபத்து வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவிய நிலையில் அதன் தாக்கம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.  

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஏராளமானோர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும்  தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.