அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகள் அதிக அளவில் இல்லை என்ற போதும், பாதிப்புகள் அதிகமாக உள்ளது.  

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  பைடனுக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாக கூறப்பட்டது.

ஏற்கனவே இவர் இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் இரு முறை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டவர். இருந்தும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், தனிமைப்படுத்தி கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சுற்றியுள்ள பாதுகாப்பிற்காக மீண்டும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தனிமையில் இருந்து கொண்டே பணியைத் தொடர்ந்து வருகிறேன். விரைவில் குணமடைந்து விட்டேன் என்ற நம்பிக்கை உள்ளது பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…