போதைப் பொருட்கள் நாட்டின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் – அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து இரண்டு நாள் கருத்தரங்கம் சண்டிகரில் நேற்று தொடங்கி வைத்தார்
அப்போது பேசிய அமித்ஷா கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமர் ஆன போது போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் கொள்கையை அறிவித்து இருந்தார்.
போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை விரைவாகவும், சரியான திசையில் மேற்கொள்ளப்படுகிறது என கூறியவர் தற்போது இது நல்ல பலன் அளிக்க தொடங்கி உள்ளது என தெரிவித்தார்.
போதைப் பொருட்கள் அதை உட்கொள்பவர்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல் இந்த சமூகம், பொருளாதாரம் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கிறது.
போதைப் பொருட்கள் மூலம் திரட்டப்படும் பணம், நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதை நாம் முற்றிலும் ஒழிக்க வேண்டும் கூறினார்.
கருத்தரங்கம் நடைபெற்ற இந்த சூழலில் டெல்லி, சென்னை, போன்ற ஆகிய இடங்களில் 31,000 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.