சோலர் கட்டமைப்பில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது – பிரதமர் மோடி

இந்தியாவில் மின் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எடுத்துக்காட்டும் விதமாக  ஒளிமயமான இந்தியா என்ற நிகழ்ச்சி  நடைபெற்று  வருகிறது. நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக பல்வேறு பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தெலங்கானாவில் 100 மெகாவாட், கேரளாவில் 92 மெகாவாட் காயம்குளம் மிதக்கும் சோலார் திட்டம், ராஜஸ்தானில் 735 மெகாவாட் சோலார் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து மேற்கூரையில் சோலார் பேனல் அமைப்பது தொடர்பாக  அறிமுகம் செய்தார்.

மத்திய அரசின் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ.5,200 கோடி மதிப்புள்ள பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இது குறித்து பிரதமர் மோடி பேசுகையில் கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் மின்துறை மிகப்பெரும் மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

சோலர் கட்டமைப்பில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. மின் துறையை மேம்படுத்தும் திட்டங்கள் மத்திய அரசு முழுவீச்சுடன் செயல்படுத்தி வருகிறது என்று அவர் கூறினார். மின் நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் செலுத்த வேண்டிய ரூ.2.5 லட்சம் கோடி கடன் பாக்கியை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

Leave a Reply

Your email address will not be published.