ஆளுநர்  பதவிக்கு மரியாதை சேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் – உத்தவ் தாக்கரே 

மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு குஜராத்திகளும் மற்றும் ராஜஸ்தானிகளும் பெரும் பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார். இந்நிலையில் குஜராத்தி மற்றும் ராஜஸ்தானிகளை வெளியேற்றிவிட்டால் பொருளாதார தலைநகராக மும்பை நீடிக்காது என்று மகாராஷ்டிர ஆளுநர் கருத்து தெரிவித்தார்.  

அவர்களை  மகாராஷ்டிராவில் இருந்து வெளியேற்றிவிட்டால், இந்தியாவின் பொருளாதார தலைநகராக மும்பை நீடிக்காது என அவர் கூறியது  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா தலைநகர் உத்தவ் தாக்கரே, மராத்தி மொழி பேசும் மக்களை ஆளுநர் இழிவுபடுத்தி விட்டதாக குற்றம் சாட்டினார்.

ஆளுநர் வரம்பு மீறிவிட்டதாக விமர்சித்துள்ள அவர், அவர் தனது பதவிக்கு மரியாதை சேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆளுநராக இருப்பவர் அவமதிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ள உத்தவ், ஆனால், அவரது பேச்சு மராட்டிய மக்களை கோபம் கொள்ள வைத்துள்ளது என கூறியுள்ளார்.

இந்நிலையில் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ள ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, தனது பேச்சில் உள்நோக்கம் இல்லை என தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு குஜராத்தி மற்றும் ராஜஸ்தானிகளின் பங்களிப்பு குறித்து மட்டுமே தான் பேசியதாகவும், மராட்டியர்களை இழிவு படுத்தவில்லை என தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *