குஜராத்தில் போதைப்பொருள் வியாபாரம் செய்யும் இவர்கள் யார்- ராகுல் காந்தி ட்வீட்

குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் கள்ளச்சாராய அதிகரித்துள்ளது குறித்து  ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.  அதில் அவர் வறண்ட மாநிலம் குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து பல வீடுகள் அழிக்கப்பட்டன. பல கோடி மதிப்புள்ள போதை பொருட்களும் அங்கு தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.

பாபு, சர்தார் பட்டேல் ஆகியோரின் நிலத்தில், கண்மூடித்தனமாக போதைப்பொருள் வியாபாரம் செய்யும் இவர்கள் யார் என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். இந்த மாஃபியாக்களின் எந்த ஆளும் சக்திகள் பாதுகாப்பு கொடுக்கிறார்கள்.

இந்த சூழலில் அகமதாபாத்தில்  கள்ளச்சாராயம் அருந்திய பலர் கடந்த 25ம் தேதி மயங்கி விழுந்ததில் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அத்துடன் பலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 42 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கள்ள சாராயம் தயாரிக்க தேவையான ரசாயனத்தை கொடுத்தவர், கள்ள சாராயம் விற்றவர் ஆகியோர் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்தி பொதுமக்கள் உயிரிழந்துள்ளதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…