கர்நாடகாவில் பதற்றம்:  மங்களூர் பகுதியில் இளைஞர் படுகொலை..!!

கர்நாடக மாநிலம் பாஜக இளைஞரணியை சேர்ந்த பிரவீன் நெட்டர் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் மேலும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மங்களூர் பகுதியில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது கலவரத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது பாசில் என்ற முஸ்லிம் இளைஞரை நேற்று இரவு அடையாளம் தெரியாத இளைஞர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இது அங்கு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மங்களூர் சிட்டி போலீஸ் கூறுகையில் இரவு 8 மணி அளவில் சில மர்ம நபர்கள் பாசிலை பயங்கர ஆயுதங்களுடன் கடுமையாக தாக்கியுள்ளனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். இன்று ஒரு நாள் மங்களூர் மாநகரில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூட சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருப்பதால், முஸ்லிம் தலைவர்கள் வீட்டில் இருந்தபடியே தொழுகையில் ஈடுபட சொல்லியுள்ளோம். விரைந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…