இலங்கைக்கு நிதி உதவி செய்யும் திட்டம் இல்லை – உலக வங்கி

இலங்கையின் பொருளாதார நிலை காரணமாக அந்நாட்டு மக்கள் சந்தித்து வரும் பாதிப்புகள் மிகுந்த கவலை தரக்கூடியவை என உலக வங்கி கூறிவருகிறது.
இலங்கைக்கு நிதி உதவி செய்யும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று உலக வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கையின் பொருளாதார நிலை மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை சீர் படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தேவையான சீர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள உலக வங்கி, பிரச்னைக்கு அடிப்படையான காரணங்களை கண்டறிந்து களைய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இதை கருத்தில் கொண்டே இதுவரை 160 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது கூறியுள்ளது. அதே நேரத்தில், மிகப் பெரிய அளவில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளாத வரை அந்நாட்டுக்கு உலக வங்கி கடன் வழங்காது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கையில் உணவிற்கு உத்தரவாதம் இன்றி 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தவித்து வருவதாக ஐ நா உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.