பாதையை விட்டு விலகிய இண்டிகோ விமானம்..!! உயிர் தப்பிய பயணிகள்..!! 

அசாம்மில் உள்ள ஜோர்ஹாட் விமான தளத்தில் ஓடு பாதையில் இருந்து விலகி சென்ற இண்டிகோ விமானம், அருகில் உள்ள ஈரமான நிலப்பகுதிக்குள் சிக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹாட் விமான தளத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு நேற்று புறப்படுவதாக இருந்த இண்டிகோ விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சென்று அருகில் உள்ள ஈரமான நிலப்பகுதிக்குள் சென்று சிக்கி கொண்டது.

இதன் காரணமாக நேற்று 2.20க்கு புறப்படுவதாக இருந்த விமானம் இந்த நிகழ்வு காரணமாக தாமதமாகி உள்ளது  என தெரிவித்துள்ளார். இது குறித்து இண்டிகோ விமானம் தரப்பில் கூறுகையில் இந்த சம்பவத்துக்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குழுவுடன் பேசி வருகிறோம். மேலும் உங்கள் PNR எண்ணை எங்களுக்கு தெரிய படுத்துங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 8:15 மணி அளவில் விமானம் ரத்து செய்யப்பட்டது. விமானத்தில் இருந்த 98 பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…