44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் – முதல் சுற்று அட்டவணை வெளியீடு!

Chess Olympiad

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய நிலையில், இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ள அணிகளுக்கான முதல் சுற்று அட்டவணை வெளியாகியுள்ளது.

முதல் சுற்றின் ஓபன் பிரிவில் இந்திய A அணி ஜிம்பாப்வே அணியையும் ,பெண்கள் பிரிவில் A அணி தஜிகிஸ்தான் அணியுடன் மோதுகிறது

முதல் சுற்றை பொறுத்தவரை ஓபன் பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய A அணி – ஜிம்பாம்பே அணியையும்,இந்திய B அணி – ஐக்கியஅரபு அமீரகம் அணியையும், இந்திய C அணி – தெற்கு சூடான் அணியுடன் மோதுகின்றனர்

பெண்கள் பிரிவை பொறுத்தவரை ,இந்திய A அணி – தஜிகிஸ்தான் அணியையும், இந்திய B அணி – வேல்ஸ் அணியையும், இந்திய C அணி – ஹாங்காங் அணியையும் எதிர்கொள்ள உள்ளனர்

44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று மாலை 3 மணிக்கு துவங்கவுள்ளது

Leave a Reply

Your email address will not be published.