காங்கோவில் கலவரம்..!! இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் உயிரிழப்பு..!!

காங்கோ நாட்டில் போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காங்கோ அரசை கவிழ்த்து தங்கள் கொள்கைகளை நிறுவ வேண்டும் என சில அமைப்பும் முயற்சித்து வருகின்றன.
இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ராணுவத்தினர் மீதும், பொதுமக்கள் மீதும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் பலியாகினர்.
இந்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பதற்காக ஐ.நா. சார்பில் காங்கோவில் அமைதிப் படை அனுப்பப்பட்டது. இதில் 70 முதல் 74 பிஎஸ்எப் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளனர்.இந்நிலையில் காங்கோ மக்கள், ஐ.நா. அமைதிப் படையினருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர்.
சமீபகாலமாக இந்த போராட்டம் வன்முறையாக மாறி உள்ளது. இதில் வடக்கு கீவ் மாகாணத்தில் உள்ள கோமா, பேனி, டெம்போ உள்ளிட்ட நகரங்களில் நடந்த பொதுமக்கள் போராட்டம் பயங்கர கலவரமாக மாறியது. அப்போது போராட்டக்காரர்கள் ஐ.நா. அமைதிப் படை முகாம்கள் மீது பெட்ரோல் குண்டுகள் நடத்தினர்.
இதில் 15 பேர் உயிரிழந்தனர்.இதில் இரண்டு ஐ.நா. காவல்துறை அதிகாரிகள், இரண்டு இந்திய பிஎஸ்எப் படை வீரர்கள், ஒரு அமைதிப் படை வீரர் ஆகியோர் அடங்குவர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.