பாஜக செயலாளர் படுகொலை..!! கர்நாடகாவில் வெடிக்கும் போராட்டம்..!!

கர்நாடகாவில் பாஜக இளைஞரணி செயலாளர் பிரவீன் நெட்டாரு படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டம்  வெடித்துள்ளது. கர்நாடக மாநிலம் தக்‌ஷின கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் நெட்டாரு பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் பதிவில் செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத சிலர் அரிவாள் வெட்டி கொலை செய்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் மாநிலத்தில் பெல்லாரி, சூலிய போன்ற பல்வேறு பகுதிகளில் போராட்டம் வலுத்துள்ளது.

பகுதிகளில் போராட்டங்கள் வலுத்துள்ளது. பிரவீன் நெட்டாரு படுகொலை தொடர்பாக காவல்துறை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை தேடி வருவதாகவும், அந்தக் காட்சியில் கேரள பதிவெண் கொண்ட ஒரு பைக்கில் மூன்று பேர் வருவதும் பதிவாகியுள்ளதாக கூறினார். இதில் 6 தனிப்படைகளை அமைத்துள்ளது. இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் படுகொலைக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகிய அமைப்புகள் தான் காரணம் என்று சிலர் கூறிவருகிறார். முதல்வர் பசவராஜ் பொம்மை நடந்த சம்பவத்தை மிகக் கடுமையாக கண்டித்துள்ளார். இவ்விவகாரத்தில் துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் சட்டத்துக்கு உட்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…