44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி..!! மோடி வருகைக்கு ட்விட்டரில் எதிர்ப்பு..!! 

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 189 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

போட்டி தொடக்க விழா மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியைத் தொடங்கி வைக்கிறார். இதற்காக தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பிரதமரை வரவேற்கின்றனர்.

பிரதமர் வருகையையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை வரும் பிரதமரை வரவேற்க பாஜக சார்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மோடி வருகையையொட்டி கோ பேக் மோடி என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது .  

Leave a Reply

Your email address will not be published.