அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு செக் வைத்த மனித உரிமை குழு..!

அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு  அடைக்கலம் தர மறுத்து 15 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை கைது செய்யக்கோரி மனித உரிமை குழு புகார் அளித்து உள்ளது. 

கடந்த 2009ம் ஆண்டு கோத்தபய இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்த போது ஜெனிவா ஒப்பந்தங்களை மீறியதாக இந்த புகாரில்  கூறப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி காரணமாக கோத்தபய சிங்கப்பூருக்கு தப்பித்து ஓடிய நிலையில், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று ஐ.டி.ஜே.பி. கேட்டுக்கொண்டுள்ளது.

கோத்தபய ராஜபக்சேவை கைது செய்யக்கோரி ஐ.டி.ஜே.பி. அமைப்பின் சார்பில் கடந்த 23ம் தேதி புகார் இருப்பதை சிங்கப்பூர் அடர்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கோத்தபாயவை கைது செய்யக்கோரி சிங்கப்பூர் அரசிடம் புகார் அளிக்கப்பட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தற்போது சிங்கப்பூரில் உள்ள கோத்தபய, அமெரிக்காவின் ஆதரவுடன் சவுதி அரேபியாவில் தஞ்சமடைய தீவிர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *