பதாகைகள் காண்பித்த எம்.பி.க்கள்..!! இடைநீக்கம் செய்த அவைத்தலைவர்..!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றன. கடந்த 18ம் தேதி தொடங்கிய கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை 18 அமர்வுகளாக நடைபெறவுள்ளன. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் அவையை நடத்த விடாமல் தடுத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர் உட்பட 4 எம்.பி.க்களை அவைத்தலைவர் ஓம் பிர்லா கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்தார்.

இன்று காலை மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த 4 எம்.பி.க்களும் அவைத் தலைவர் முன் நின்று பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். 

பிற்பகல் இதுகுறித்து விவாதிக்கலாம் என்று ஓம் பிர்லா தெரிவித்தார். எனினும், அவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து அவைத் தலைவர், அவர்கள் நால்வரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

பதாகைகளை காண்பிக்க வேண்டும் என்றால் வெளியே சென்று காண்பியுங்கள். நீங்கள் நான் கூறுவதை கேட்க மறுக்கிறீர்கள் என்று கூறி அவர்களை கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…