சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபடுவேன் – திரௌபதி முர்மு

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் முதல் உரையாற்றினார். அப்போது இந்தியாவில் ஏழைகள் கனவு காணலாம் என்பதற்கு நான் தான் சான்று. நான் குடியரசுத் தலைவராக தேர்வாகி உள்ளது எனக்கு பெருமித உணர்வைத் தருகிறது.

இந்தியா 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் நான் குடியரசுத் தலைவராக தேர்வாகியுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். மேலும் அவர் பேசுகையில் இந்தியா ஒவ்வொரு துறையில் புதிய வளர்ச்சி அத்தியாயங்களை எழுதிக் கொண்டிருக்கிறது.

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் யுத்தம் உலக அரங்கில் நாட்டின் பெருமையை உயர்த்தியுள்ளது. நான் நாட்டின் பெண்கள், இளைஞர்கள் நலனில் முக்கியத்துவம் செலுத்துவேன். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபடுவேன் என்று  திரௌபதி முர்மு பேசினார்.

இதனைத் தொடர்ந்து திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் அதிகாரபூர்வ இருக்கையில் அமரச் செய்தார் ராம்நாத் கோவிந்த். இந்த நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

Leave a Reply

Your email address will not be published.