அச்சுறுத்தலாக உள்ள சீனாவின் சதி திட்டங்கள் விரைவில் முடிவுக்கு வரும் – ரிஷி சுனக்

பிரிட்டனின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, சர்வதேச பாதுகாப்புக்கே சீனா நம்பர் 1 அச்சுறுத்தல் என்று ரிஷி சுனக் ஆவேசமாகப் பேசினார். இந்தியா வம்சாவளியை சேர்ந்த ரிஷி, அரசியல் ஆர்வம் காரணமாக கன்சர்வேடிவ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சில ஆண்டுகள் தீவிரமாக கட்சிப் பணியாற்றிய ரிஷிக்கு, 2014-ல் வடக்கு யார்க்‌ஷையர் ரிச்மாண்டு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் சீனா மற்றும் ரஷ்யா உடனான உறவு தொடர்பான விவகாரங்களில் ரிஷி சுனக் நிலைப்பாட்டை மற்றொரு போட்டியாளர் லிஸ் ஸ்ட்ராஸ் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் ரிஷி சுனக் பேசிய போது பிரிட்டனின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல சர்வதேச பாதுகாப்புக்கே சீனா நம்பர் 1 அச்சுறுத்தலாக உள்ளது. உள்நாட்டு உளவு அமைப்பு சீன நிறுவனங்கள் பிரிட்டனில் மேற்கொள்ளும் உளவு வேலைகளை குறித்து ஆராய்ந்து கண்காணித்து வருகிறது. 

பிரிட்டன் அரசியல்வாதிகள் இதுநாள் வரை சீனாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்தது போதும். இதுநாள் வரை பிரிட்டன் சீனாவின் சதி திட்டங்களையும், உள்நோக்கம் கொண்ட லட்சியங்களையும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், நான் பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்கும் முதல் நாளில் இருந்தே இதை நான் எதிர்த்து போராடுவேன். 

Leave a Reply

Your email address will not be published.