அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி 5 பேர் படுகாயம்..!

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு வழக்கம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பூங்காவில் திடீரென்று நடந்த துப்பாக்கி சூடு நடத்தியதில் ஏழு நபர்களுக்கு காயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள ஒரு பூங்காவில் வாகன கண்காட்சி நடந்திருக்கிறது.

எனவே அதனைக் காண அதிகமான மக்கள் குவிந்திருந்தார்கள். அப்போது, திடீரென்று மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஏழு நபர்களுக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல்துறையினர் பேசுகையில் பூங்காவில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 7 பேர் காயமடைந்த நிலையில்  இரண்டு பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து விசாரணை முடியும் வரை பூங்காவில் சில மணி நேரம் மக்களை  அடைத்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில்  அதை தடுக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கம் பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published.