இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது – ராகுல் காந்தி

இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னிபாத் என்ற பெயரில் மத்திய அரசு புதிய திட்டத்தை தொடங்கி உள்ளது. இத்திட்டத்தை நாடு முழுவதும் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது. எதிர்க்கட்சிகளும், முன்னாள் ராணுவ அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த புதிய திட்டத்துக்கு ராணுவத்துக்கு தயாராகி வரும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கானா, பீகாரில் ரயில்களுக்கு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தீ வைத்தனர். இப்படி போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபக்கம், அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

இதுவரை நடைபெற்ற ஆட்கள் தேர்வில் லட்சக்கணக்கானோர் பணிக்கு விண்ணப்பித்து உள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 60,000 வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள், அவர்களில் 3000 பேர் மட்டுமே அரசு வேலை பெறுகிறார்கள்.

4 வருட ஒப்பந்தத்தில் ஓய்வு பெறும் ஆயிரக்கணக்கான அக்னி வீரர்கள் எதிர்காலம் எப்படி இருக்கும். பிரதமரின் ஆய்வகத்தின் இந்த புதிய பரிசோதனையால், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் ஆகிய இரண்டும் ஆபத்தில் உள்ளது என ராகுல் காந்தி தனது ட்வீட் மூலம் குற்றம்சாட்டி உள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.