உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் தேவை – ஜெலன்ஸ்கி

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து  ஐந்து மாதங்களாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. ரஷ்ய படையினர், ஒவ்வொரு நாளும் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதிகளை ஆக்கிரமிக்க தாக்குதல் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில் அங்கிருந்து வீரர்கள் 300 பேர் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

இந்நிலையில் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டோனட்ஸ்க் என்ற மாகாணத்தில் இருக்கும் கிராம டோர்ஸ்க் என்னும் நகரத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த வீரர்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், வீரர்கள் 300 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்று ரஷ்ய ராணுவம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் ரஷ்ய படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு மேலும் 100 டிரோன்களையும், பீரங்கி தடுப்பு ஆயுதங்களையும் பிரிட்டன் அனுப்பி வைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் 1600 பீரங்கி தடுப்பு சாதனங்கள், 6000 பீரங்கி ஏவுகணைகளையும் அனுப்பி வைக்கப்படும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.