மாட்டிக்கிட்டியே பங்கு..!! ஊழலில் சிக்கிய அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி..!!

மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஊழல் வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ரூ.100 கோடி ஊழல் நடைபெற்றதாக புகார் நிலையில் அதை அமலாக்கத் துறையும் இந்த வழக்கில் தீவிரம் காட்டியது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக நேற்று 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

இந்த சோதனையில் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நண்பர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் ரூ.20 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.  மேலும் இது தொடர்பான முக்கிய ஆவணங்கள், வெளிநாட்டு கரன்சி, தங்கம் ஆகியவையும்  கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இவை அனைத்தும் ஆசிரியர் நியமன ஊழல் விவகாரத்தில் தொடர்புடையது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். நேற்றிரவு விடிய விடிய விசாரணை நடத்தப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஒத்துழைக்காத நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published.