பாடப்புத்தகத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்ட ஸ்ரீமதி உடல்… காரணம் என்ன?

Srimathi

சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி உயிரிழந்தார் அவரது உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை பிண அறையில் கடந்த 10 நாட்களாக வைக்கப்பட்டிருந்து. மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த சில நாட்களாகவே கள்ளக்குறிச்சி பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.

இதனால் கடந்த ஒரு வாரமாக போலீஸார்கள் மருத்துவமனை மற்றும் நகரப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்தன. மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சட்டப்போராட்டம் நடத்திய அவரது பெற்றோர் நீதிபதியின் அறிவுறுத்தலுக்குப் பிறகு உடலை பெற்றுக்கொள்வதாக நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்நிலையில் 11-வது நாளான இன்று ஸ்ரீமதி உடல் அவரது தாய், தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டன.

இன்று காலை பள்ளி மாணவி ஸ்ரீமதி உடல் அவரது சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அமைச்சர் கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மாவட்ட ஆட்சியர் ஷவரன் குமார் ஜடாவத், வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் மற்றும் மாணவியின் உறவினர்கள் தற்போது மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து மாணவியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாணவியின் உறவினர்கள், ஊர் மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவி ஸ்ரீமதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஸ்ரீமதிக்கு பிடித்தமான உயிரியல் பாட புத்தகத்துடன்‌ உடல் மீது வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *