ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கும் வெயில்..!! முக்கிய நகரங்களுக்கு ரெட் அலர்ட்..!!

ஐரோப்பிய நாடுகளில் தற்போது கடுமையான வெப்பநிலை நிலவு வருவதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. போலோக்னா மற்றும் ரோம் நகரில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் மிலன் நகரில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக இத்தாலி நாட்டில் உள்ள 16 நகரங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெப்பம் காரணமாக இதுவரை 1000 மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் 672 பேர் 85 வயதுக்கு உட்பட்டவர்கள்.
சுவாச கோளாறு மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் அதிகம் உயிரிழந்ததாக ஸ்பெயின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
இந்த காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் கடும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் நீச்சல் குளங்கள் மற்றும் கடற்கரைகளை நோக்கி படையெடுக்கின்றனர்.