குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு..!! வாழ்த்து தெரிவித்த முக்கிய தலைவர்கள்..!! 

நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற பெருமையுடன் நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு நாளை மறுநாள் பதவியேற்கிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் நிலையில் பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சர்கள் என பலரின் முன்னிலையில்  திரௌபதி முர்மு  பதவியேற்க உள்ளார்.

கடந்த 18ம் தேதி நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தல் முடிவில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 64%வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 % வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இந்நிலையில் நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு நாளை மறுநாள் காலை பதவியேற்கிறார். 

இதற்கான பதவியேற்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முக்கு, எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் மோடி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மோடியை சந்திக்க டெல்லி சென்றுள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து உள்ளார். 

இந்நிலையில் ஆடிக்கிருத்திகை நன்நாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும் என ட்வீட் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.