இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு..!! 

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க, மார்க்சிஸ்ட் ஜேவிபி கட்சி தலைவர் அனுரா குமார திசாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்எல்பிபி) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற டல்லஸ் அழகப்பெரும ஆகியோர் போட்டியிட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய அதிபரை தேர்வு செய்யும் வகையில் வாக்குகளைப் பதிவு செய்தனர்.இதில்  225 எம்.பி.க்கள் 2 பேர் ரகசிய வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில் 223 பேர் வாக்களித்தனர். இவற்றில் 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் அதிபராக தேர்வாகியுள்ளார்.  

அதிபர் தேர்தலுக்கு மனு தாக்கல் செய்திருந்த முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று திடீரென தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். நாட்டு நலனுக்காக இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…